Breaking News

ஜவுளி நகரமான கோவையில் ராம்ராஜ் காட்டன் 20வது ஷோரூம் திறப்பு....!

கோவை காந்திபுரம் 100 அடி சாலை பகுதியில் ராம்ராஜ் காட்டனின் 20வது ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்வியாளர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பக்தவத்சலம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அதனைத்தொடர்ந்து கோவையைச் சேர்ந்த எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே. ஸ்ரீனிவாசன் ஆடைகளை வாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.



ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு ராம்ராஜ் காட்டன் தலைவர் கே.ஆர். நாகராஜன், சுயம்வர கிராண்ட், பரிணயம் கிராண்ட், சங்கல்பம் கிராண்ட் மற்றும் லக்ஸ் செட் ஆகிய கிராண்ட் கலெக்ஷன்களையும் அறிமுகம் செய்து வைத்தார். 

இதில் வேட்டி-சட்டைகள், ஸ்கை ப்ளூ, கோல்ட், மோஸ் கிரீன் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற வண்ணங்களில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஷோரூமில் வெள்ளை வேட்டிகள் மற்றும் சட்டைகள் முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை கால ஆடைகள் மற்றும் பல்வேறு வகையிலான புதிய ஆடை ரகங்கள் வரை ஏராளமாக உள்ளன.


துவக்க விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், கோயம்புத்தூரில் எங்கள் 20வது ஷோரூமைத் திறப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கோயம்புத்தூர் எங்களுக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்த நகரமாகும். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக எங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். 


அவர்களின் ஊக்கமே எங்கள் பயணத்தின் அடித்தளமாக இருந்து வருகிறது, பாரம்பரியத்தை போற்றும் வேட்டி-சட்டைகளை பல்வேறு வண்ணங்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.


இந்நிகழ்வில் ராம்ராஜ் காட்டனின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் என். பழனிசாமி, இணை நிர்வாக இயக்குனர் எஸ். அஸ்வின் மற்றும் ஹீரோ ஃபேஷன் நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி, அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரபலங்கள், தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455



No comments

Thank you for your comments