Breaking News

சுடுகாட்டில் தண்ணீர் வசதி கோரி நூதன ஈமச்சடங்கு போராட்டம் – கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

 விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள க.இளமங்கலம் கிராமத்தில் இன்று பரபரப்பு நிலவியது.

அக்கிராமத்தில் ஈமச்சடங்கு நடைபெறும் சுடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாதது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

பின்னர், இறந்தவரின் சடலத்துடன் தாரை, தப்பட்டை, ஊர்வலமாக வந்து, ஊராட்சி நிர்வாக செயலாளரை கண்டித்து, சுடுகாட்டில் தண்ணீர் வசதி கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த தகவல் அறிந்து விரைவாக கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அதில், சுடுகாட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தரப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.



இச்சம்பவம், கிராம சபை கூட்டங்களின் பயனும், அடிப்படை வசதிகள் குறைவால் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களும் மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


விஜய்யை சீண்டிய சத்யராஜ் மகள்! - தொண்டர்களை பார்த்து பயப்படுகிறவர் தலைவர் அல்ல .. #viralvideos

No comments

Thank you for your comments