Breaking News

காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவை துவக்கம்


 காஞ்சிபுரம், அக். 11:

தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்களின் தொடர்ந்து வலியுறுத்தலின் பேரில், கடந்த 09.09.2025 அன்று காஞ்சிபுரம் வருகை தந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

துணை முதலமைச்சரின் பரிந்துரையின்படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் புதிய நகரப் பேருந்து சேவை துவங்கப்பட்டது.


இந்த சேவையில்:

1️⃣ அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை – காரப்பேட்டை – இரயில் நிலையம் – டோல்கேட் – பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வழித்தடத்தில் ஒரு பேருந்து சேவை

2️⃣ ஒலிமுகமதுபேட்டை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – செவிலிமேடு வழித்தடத்தில் இன்னொரு பேருந்து சேவை

இந்த இரண்டு வழித்தடங்களிலும் நகரப் பேருந்துகள் இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன.


புதிய சேவையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம், மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், மாநகரச் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், பகுதிச் செயலாளர்கள் கே. திலகர், எஸ். சந்துரு, அ. தசரதன், சு. வெங்கடேசன், தொ.மு.ச. நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





No comments

Thank you for your comments