கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு - 49 பணியிடங்களுக்கு 676 பேர் தேர்வு எழுதினர்
காஞ்சிபுரம், அக்.11:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டுறவு நிறுவனங்களில் 49 உதவியாளர் பணிக்கு விண்ணபிக்குமாறு அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி எழுத்துத்தேர்வினை எழுத 874 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வு காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
விண்ணப்பித்தவர்களில் 676 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
தேர்வர்களுக்கு தேர்வு மையத்துக்கு செல்ல வசதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்து வசதியும், தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் கூட்டுறவுச்சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
.jpg)
No comments
Thank you for your comments