காவல்துறையினரின் கவாத்துப் பயிற்சி மற்றும் கொடி அணிவகுப்பு
விருத்தாச்சலம் :
பயிற்சிக்குப் பிறகு, வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகர மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கொடி அணிவகுப்பு (Flag March) மேற்கொள்ளப்பட்டது. இந்த அணிவகுப்பு பாரத் ஸ்டேட் வங்கி, பாலக்கரை, பேருந்து நிலையம், கடை வீதி, மற்றும் தென்கோட்டை வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம், விருத்தாச்சலம் காவல் நிலையம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, மற்றும் கம்மாபுரம் காவல் நிலையம் உள்ளிட்ட பிரிவுகளின் ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து நிலை காவல்துறையினரும் பங்கேற்றனர்.
இந்த நடவடிக்கை மூலம் தீபாவளி காலத்தில் நகரில் சட்ட ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✍️ செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545
No comments
Thank you for your comments