பிக்சஸ் டெக்னாலஜிஸ் 5-ம் ஆண்டு விழா ..!
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழக்கி வரும் பிக்சஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது 5வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக கொடிசியா பகுதியில் உள்ள ஜென்னிஸ் கிளப்பில் பசுமை கோயமுத்தூர் திட்டத்தில் இணையும் வகையில் நகர் முழுவதும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சியை துவங்கியது.
இந்நிகழ்ச்சி குறித்து பிக்சஸ் டெக்னோலாஜிஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோகிலா கணேசன், நிர்வாக இயக்குனர் லியோ சர்னி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மாறன் சுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 60 சது சதுர அடி அறையில் 3 நண்பர்களுடன் துவங்கிய இந்த நிறுவனம் இன்று 75 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்களுடன் பிரமாண்ட நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
ஐடி ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வு, டிஜிட்டல் மார்க்கெட்டிங்,நிர்வகிக்கப்பட்ட சேவைகள் மற்றும் வணிக வளர்ச்சிக்கான ஆலோசனை ஆகியவற்றில் அதிநவீன தீர்வுகளை வழங்கி வருகிறது,
மேலும் இந்நிறுவனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவில் ஒரு பகுதியாக பிக்சர்ஸ் டிஜிட்டல் மாற்றத்திலிருந்து சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு தனது கவனத்தை திசை திருப்பி உள்ளது தொழில்நுட்பத்தை சுற்றுச்சூழலுடன் இணைக்கிறது தனது சமூக மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இந்நிறுவனம் உடுமலைப்பேட்டை தலி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு வசதி செய்துள்ளது இது பழங்குடி சமூகம் தலைமையிலான சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார திட்டங்களை அதிகரிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பசுமை கோயம்புத்தூர் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக ஆண்டு விழா வாரத்தில் கோவை முழுவதும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்துகிறது வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பு மிக்க சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை தாங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் இந்த சாதனை ஒரு முடிவு அல்ல ஒரு தொடக்கமாகும் என்று தெரிவித்தனர்
📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455

No comments
Thank you for your comments