Breaking News

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள என்.ஜி.பி.கலையரங்கில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக் கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.



இப்பட்டமளிப்பு விழாவில் டாக்டர் என்ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி,கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக் கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தெற்கு மண்டல இயக்குனரும், உஸ்மானியா பல்கலைக்கழக சமூகவியல் துறைப் பேராசிரியருமான முனைவர் B.சுதாகர் ரெட்டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரை யாற்றினார்.

சுதாகர் ரெட்டி கூறியதாவது, 

பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் வாழ்த்துக்கள்,தாங்கள் பெற்ற பட்டத்தை வைத்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார். மாணவர்கள் அர்ப்பணிப்புடன் கற்றல் செயல் பாடுகளில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் என்ஜி.பி. கல்வி நிறுவனம் மாணவர்களின் வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் அக்கறை உடன் செய்யலாற்றுவது மிகுந்த மகிழச்சியைத் தருகிறது.


மேலும் சர்வதேச அளவில் பல்வேறு துறை சார்ந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு மாணவர்கள் தங்களை தகுதி படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகளையும் வசதிகளையும் இந்நிறுவனம் செய்து கொடுக்கிறது. இதனை மாணவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். 
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. சரவணன் பட்டமளிப்பு உறுதிமொழியை வழங்கினார். 


விஜய்யை சீண்டிய சத்யராஜ் மகள்! - தொண்டர்களை பார்த்து பயப்படுகிறவர் தலைவர் அல்ல .. #viralvideos




இந்த விழாவில் மொத்தமாக 1992 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். இளங்கலையில் 1479 மாணவர்களும், முதுகலையில் 431 மாணவர்களும், பல்கலைக்கழகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற இளங்கலை 54 மாணவர்களும் முதுகலையில் 431 மாணவர்களும், பட்டம் பெற்றனர். 

இந்நிகழ்வில், என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஷ்வரன், என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் இயக்குனர் முனைவர் பெ.இரா. முத்துசாமி, புல முதன்மையர்கள் மற்றும் துறைத் தலைவர்கள். பேராசிரியர்கள், அலுவலர்கள். பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455

No comments

Thank you for your comments