Breaking News

விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் – ₹40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

விருத்தாசலம் :

கடலூர் மாவட்ட விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர் மற்றும் மங்களூர் ஆகிய நான்கு ஒன்றியங்களின் விவசாயிகளை இணைத்து பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.



இந்தச் சங்கம் மூலம்

  • விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது,
  • 421 நியாய விலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது,


  • குறைந்த வட்டியில் தானிய வீட்டுக் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் வழங்கப்படுகிறது,
  • தானிய கிடங்குகள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன,
  • ஆவின் பால் மொத்த விற்பனை நிலையம் மற்றும் 20% தள்ளுபடியில் மருந்தகம் ஆகியன இயங்குகின்றன,
  • மேலும் உளுந்து கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டிய தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையில் எண் 12 தொடர்பான விவாதத்திற்குப் பிறகு, கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் ₹40 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து 5% வட்டியில் கடனாக வழங்கப்பட்டுள்ளது.


இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. கணேசன் அவர்கள் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி, அதன் பின்னர் கூட்டுறவு பட்டாசு கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, விருத்தாசலம் சிறப்பாக துணை பதிவாளர் சுவிதா, நகர மேலாளர், இயக்குநர்கள் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)





No comments

Thank you for your comments