Breaking News

காஞ்சிபுரம் அருகே குண்டுகுளத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம்


காஞ்சிபுரம், அக்.13:

காஞ்சிபுரம் அருகே குண்டுகுளம் மூவேந்தர் நகர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.


காஞ்சிபுரம் அருகே குண்டுகுளம் மூவேந்தர் நகரில் பழங்குடியினர்கள் வசித்து வரும் பகுதிகளில் நடைபெற்ற சர்வதேச பெண் குழந்தைகள் தினத்திற்கு குழந்தைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் து.ராஜூ தலைமை வகித்தார்.

நெற்களம் பெண்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மல்லிகா மற்றும் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து பெண் குழந்தைகளும் உயர்கல்வி படிக்க வேண்டும், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்,ஆண் குழந்தைகளுக்கும் பாலின சமத்துவம் குறித்து பயிற்சியளிக்க வேண்டும். 


குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுவதுடன் பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் நலவாழ்வையும் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது.

கிராமம் முழுவதும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றதோடு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் குணசுந்தரி மற்றும் சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.நிறைவாக துர்கா நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments