Breaking News

முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய தாமல் ஏரி -மலர் தூவி நீரினை வரவேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி



முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய தாமல் ஏரி -மலர் தூவி நீரினை வரவேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி

முன்று  கலங்கள் வழியாக 430கன அடி நீர் வெளியேறி 2319 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது


காஞ்சிபுரம் :

ஏரிகள் மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் முழுவதும் நிரம்பி உபரி நீர் தற்போது வெளியேறி வருகிறது. 


இந்நிலையில் இந்த ஏரியினை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தாமல் ஏரியினை பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டு கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீரில் மலர் தூவி நீரினை வரவேற்றார்.

 

6030மீ நிளம் கொண்ட தாமல் ஏரியில் 10மதகுகள் ,3கலங்கள் உள்ளன.தற்போது ஏரியின் முழு கொள்ளவான 18அடியை எட்டியது தொடர்ந்து மூன்று கலங்கள் வழியாக 430 கன அடி நீர் வெளியேறி வருகிறது.


இதன் மூலம் சுமார் 2319 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன்.இதனால் சுற்றியுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

பின்னர், தாமல்  ஏரியின் நிலவரம்,  கொள்ளளவு,  தற்போதைய உபரி நீர் நிலவரம் குறித்து நீர்வளத்துறை துறை அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கி எடுத்து கூறினர்.

இதனை தொடர்ந்து , காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் ஒன்றான தாமல் ஏரியில் நீர் நிரம்பி 430 கன அடி நீர் மூன்று கலங்கள் வழியாக உபரி நீர் வெளியேறுவதாகும், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீர் சேமிப்பு அதிகரிக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டதாகும்

 இதுகுறித்து நீர்வளத்துறை த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இனி வருங்காலங்களில் நீர் சேமிப்புக்கு வழிவகை செய்யப்படும் எனவும் இந்த ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் அருகில் உள்ள கிராம ஊராட்சி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.


No comments

Thank you for your comments