Breaking News

மங்களம் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் செருப்பு வீச முயன்றவரை கைது செய்ய கோரிக்கை


 மங்களம் பேட்டை :

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களை நோக்கி உச்சநீதிமன்றத்தில் சனாதன சங்கி ராகேஷ் கிஷோர் செருப்பு வீச முயன்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) பிரிவுகளின் கீழ் கைது செய்யக் கோரி, மங்களம் பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் களப்போராளி தென்றல் சிறப்பு உரையாற்றினார்.


தலைமை:
விடுதலை அம்பேத் – நகர செயலாளர்

முன்னிலை:
ராஜ்குமார் – மண்டல செயலாளர்
சுப்பு சோதி – ஒன்றிய செயலாளர்
சதீஷ்குமார் – வழக்கறிஞர் அணி மா.து. அமைப்பாளர்
ஜுட்வீரமணி, தேவா, கண்ணன், அகத்தியன் பாலா, அய்யப்பன், வீரத்தமிழன், ஆதிசங்கர்

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, அரசாங்கம் உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

 📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)


No comments

Thank you for your comments