Breaking News

ஜோஸ் ஆலுக்காஸின் புதிய கிளை திறப்பு...!

இந்தியாவில் நிகரற்ற தரம், புதுமையான வடிவமைப்பு மற்றும் தற்காலத்திற்கு ஏற்ற நவீன ஆபரணங்களுக்காக மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற ஜோஸ் ஆலுக்காஸ், கோவை ஒப்பணக்கார வீதியில் புதிய 2வது கிளை துவக்க விழாவில் ஜோஸ் ஆலுக்காஸின் பிராண்டு தூதரும், திரைப்பட நடிகருமான ஆர். மாதவன் பிரமாண்ட ஆபரண ஷோரூமை துவக்கி வைத்தார்.


 அதனைத்தொடர்ந்துஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரான. ஜோஸ் ஆலுக்காஸின் சுய வரலாறு புத்தகமான ‘தங்கம்’ (கோல்டு) என்பதன் தமிழ் பதிப்பையும் நடிகர் மாதவன் வெளியிட்டு அறிமுகம் செய்தார். இத்திறப்பு விழாவில் ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ், பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கணபதி ராஜ்குமார்,  மேயர். கே. ரங்கநாயகி, துணை மேயர் ஆர். வெற்றிச்செல்வன் ஆகியோர்  கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.  இரு தளங்களுடன் 8000 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த புதிய ஷோரூம், மிகப்பெரிய ஆபரண விற்பனை யகமாகும்.

இந்த பிரபல பிராண்டின் தங்க, வைர, பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் ஒட்டுமொத்த அணிவரிசையும் இந்த ஷோரூமில் இடம்பெற்றிருக்கிறது.  மணப் பெண்ணுக்கான ஆபரணங்கள், விழாக்கால மற்றும் நவீன ஆபரண கலெக்‌ஷன்கள் என பல்வேறு வகைகளும் இந்த பிராண்டின் தனி முத்திரையான நகை வடிவமைப்பில்  ஜொலிக்கிறது.

ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ்  கூறுகையில், 

எமது வளர்ச்சி பயணத்தில் தமிழ்நாடு எப்போதும் மிக முக்கியப் பங்கினை வகித்து வருகிறது.  இங்கு தான் அதிக எண்ணிக்கையிலான ஷோரூம்களையும் மற்றும் வலுவான, பரவலான இருப்பினையும் நாங்கள் கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாட்டின் குறிப்பாக கோவை மாநகரின் மக்கள், ஜோஸ் ஆலுக்காஸின் பயணத்தை வடிவமைத்து மேம்படுத்துவதில் மிகச்சிறப்பாகபங்காற்றியிருக்கின்றனர்அவர்களின் நம்பிக்கை மற்றும் பாசத்திற்கு எமது சமர்ப்பணமாக இந்த பிரதான ஆபரண விற்பனையகம் அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.

 நடிகர் மாதவன்  பேசுகையில், ஜோஸ் ஆலுக்காஸ் உடனான எனது உறவும், பிணைப்பும் எப்போதும் ஆழமானதாகவும், தனித்துவ மானதாகவும் இருந்து வருகிறது.  

அவர்களது ப்ரீமியம் ஷோரூம்களுக்குள் நாம் நுழையும் ஒவ்வொரு நேரத்திலும் நகை வடிவமைப்புத் திறனோடு அற்புதமான உணர்வுகளை இந்த பிராண்டு எவ்வளவு அழகாக இணைக்கிறது என்பதை நான் பார்க்கிறேன்.  கோவை மாநகரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய பிரமாண்ட ஷோரூம், அதே உணர்வை கொண்டிருக்கிறது.  


தமிழ்நாட்டின் மக்களுக்கு உண்மையிலேயே சிறப்பான அனுபவத்தை உருவாக்க வடிவமைப்புத் திறனும், பாரம்பரிய செழுமையும் இங்கு ஒருங்கிணைந்திருக்கின்றன.மேலும் ‘தங்கம்’ என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பை  நான் வெளியிட்டதை பெருமிதம் கொள்கிறேன் தமிழ் மொழியில் ‘தங்கம்’ என்ற சுய வரலாறு நூலின் முதல் பிரதியை பெறுவது பெருமையையும், தாழ்மை உணர்வையும் ஒருங்கிணைத்து தரும் தருணமாக இருக்கிறது. 

ஜோஸ் ஆலுக்காஸ் அவர்களின் அசாதாரணமான பயணத்தையும் இந்த பாரம்பரியம் மிக்க பிராண்டை வடிவமைக்க உதவியிருக்கும் மதிப்பீடுகளையும் இந்த புத்தகம் தெளிவாக சித்தரிக்கிறது என தெரிவித்தார்.

செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455

No comments

Thank you for your comments