Breaking News

22 ஆண்டுகால போராட்டாம்.. நிதி ஒதுக்கியும் சாக்கடைப் பணி தடை... திமுகவினர் அராஜகம்... போராடும் பொதுமக்கள்.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறை


 பெண்ணாடத்தில் சாக்கடைப் பணி தடை – முன்னாள் எம்எல்ஏ தமிழழகன் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

பெண்ணாடம் :

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் மகாத்மா காந்தி தெருவில் அரசு நிதியில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி, 22 ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரியிருந்த நீண்டநாள் கோரிக்கைக்கு பிறகு தற்போது நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், தனிநபர் ஒருவர் பணியை தடுத்து நிறுத்தியதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து, பொதுமக்கள் தெரிவித்தபடி, அந்த நபருக்காக திமுகவினர் பொதுமக்களிடம் அராஜக போக்கைக் கையாளுகிறார்கள் என்றும், போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் எம்எல்ஏ மற்றும் பாஜக கடலூர் மாவட்ட தலைவர் க. தமிழழகன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவர் அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Thank you for your comments