Breaking News

முருகன்குடியில் வள்ளலார் 203வது வருவிக்கவுற்ற நாள் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது



 கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி:

வள்ளலார் பணியகம் சார்பில் வள்ளலார் அவர்களின் 203வது வருவிக்கவுற்ற நாள் பெருவிழா சன்மார்க்க கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு (05.10.2025) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி காலை 11.00 மணி முதல் 1.30 மணி வரை எம். ஆர். எஸ். ஈஸ்வரா வணிக வளாகம் (கனரா வங்கி மாடி), முருகன்குடி வள்ளலார் பணியகத்தில் நடைபெற்றது.

🎇 நிகழ்வின் சிறப்புகள்

வள்ளலார் பணியக பொறுப்பாளர் தயவுத்திரு தங்க. பன்னீர்செல்வம் தலைமையேற்றார்.

சிறப்புத் தலைவராக நாட்டு வைத்தியர் பெரங்கியம் சிவ. வரதராஜன் விளக்கேற்றி, “இயற்கை உணவு” என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார்.



வள்ளலார் பணியக செயலாளர் பிரதாபன் அவர்கள் அருட்பாபாடி தொடங்கி வைத்தார்.

மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு. செந்தமிழ்செல்வி, பொருளாளர் ம. கனிமொழி, செயற்குழு உறுப்பினர் வே.தமிழ்மொழி, தயவுத்திரு வீராசாமி ஆகியோர் உரையாற்றினர்.

🍲 பசியாற்றுவித்தல் அறப்பணி

முருகன்குடியைச் சேர்ந்த ம. வீரமணி – தீபா குடும்பத்தினர் பசியாற்றுவித்தல் சேவையை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் பொருளாளர் தயவுத்திரு த. இரத்தினக்குமார் நன்றி கூறி நிறைவு செய்தார்.




நிகழ்வை க. முருகன், மா. மணிமாறன், இரா. கனகசபை ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சன்மார்க்க சான்றோர்கள், அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

🩺 இலவச மருத்துவ ஆலோசனை

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பெரங்கியம் சிவ. வரதராஜன் அவர்கள் கட்டணம் இல்லாத இயற்கை மருத்துவ ஆலோசனையை வழங்கினார்.

📞 தொடர்புக்கு

வள்ளலார் பணியகம்,
முருகன்குடி, கடலூர் மாவட்டம்.

📱 9443904817 | 9486166318 | 9442833140 | 9787700902

✍️ செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545








No comments

Thank you for your comments