Breaking News

சங்கரா பல்கலையில் மாரத்தான் ஓட்டப் போட்டி



காஞ்சிபுரம், அக்.5:

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் மாரத்தான் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ எழிலரசன் சான்றிதழ்களும்,ரொக்கப்பரிசும் வழங்கினார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலை சார்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்துவதற்காக மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. 

900க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டிகளை பல்கலையின் துணைவேந்தர் ஸ்ரீநிவாசு தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.சார்பு துணை வேந்தர் அசோக்குமார் மேத்தா முன்னிலை வகித்தார். 

ஆண்களுக்கு 10 கி.மீ,பெண்களுக்கு 8 கி.மீ, குழந்தைகளுக்கு 3 கி.மீ என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் சான்றிதழ்,பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகளும் வழங்கினார்.

ஏற்பாடுகளை பல்கலையின் பதிவாளர் ஸ்ரீராம்,அறிவியல் புல முதல்வர் கே.வெங்கடரமணன்,உடற்கல்வி இயக்குநர் அ.குணாளன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments