Breaking News

ஓரிக்கை அரசுப்பள்ளியில் கண்காணிப்பு கேமரா - எம்எல்ஏ சுந்தர் இயக்கி வைத்தார்


காஞ்சிபுரம், அக்.10:

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிட உயர்நிலைப்பள்ளியில் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கான கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் இயக்கத்தை உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 50 வது வார்டு ஓரிக்கையில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பள்ளிக் கட்டிடத்தை உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்திருந்தார்.

திறப்பு விழாவின் போது பள்ளி ஆசிரியர்கள் இப்பள்ளியின் விடுமுறை நாட்களில் பள்ளி வேலை நேரம் முடிந்த பின்பு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் எம்எல்ஏ க.சுந்தரிடம் கோரிக்கை வைத்தனர். 



பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக்குழுவின் தலைவர் சாந்தி சீனிவாசன் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்திற்குள் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

தொடக்க விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி அதன் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர்கள் மு.சங்கர், கார்த்திக், தேனம்பாக்கம் சங்கர் உட்பட பள்ளியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

🌿 Jivada Kumkumadi Tailam – Ayurvedic Face Oil with Saffron & 28 Herbs

Brightens Skin ✨ | Anti-Ageing | Reduces Dark Spots, Wrinkles, Hyperpigmentation & Fine Lines | Suitable for All Skin Types | 30ml

🛒 Buy Now on Amazon

 



No comments

Thank you for your comments