காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் ஏரி பருவமழை தொடங்கும் முன்பே நிரம்பியது
காஞ்சிபுரம், அக்.12:
ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக இருந்து வருகிறது தாமல் ஏரி.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ளது தாமல் ஏரி.
ஆந்திரா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பொன்னை அணைக்கட்டிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் திருப்பி விடப்படுவதால் தாமல் ஏரி முழுக்கொள்ளவான 18 ஏரியை எட்டியிருக்கிறது.இதனால் உபரி நீர்க் கால்வாய்கள் மூலமாக வெளியேறி வருகிறது.
ஏரியிலிருந்து வெளியேறி வரும் உபரி நீரில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் இருந்ததால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் குளித்து விடுமுறையை கழித்துமகிழ்ந்தனர்.
No comments
Thank you for your comments