Breaking News

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் உண்டியல் காணிக்கை வரவு ரூ.5.66 லட்சம்


காஞ்சிபுரம், அக்.9:

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.5,66,792 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்.108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் இருந்து வரும் இக்கோயிலில் ஒரு ஆண்டுக்குப் பிறகு 3 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் காணிக்கையாக மொத்தம் ரூ.5,66,792 செலுத்தியிருந்தனர்.

கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எஸ்கேபி சந்தோஷ்குமார், கோயில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், ஆய்வாளர் அலமேலு ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவியர், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியலை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



No comments

Thank you for your comments