Breaking News

🚨 காஞ்சிபுரம் தயாரிப்பு இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி

 


அண்டை மாநிலங்களில் பரவிய துயரம்

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.




தமிழக அரசுக்கு கடிதம்

இச்சம்பவம் தொடர்பாக அந்த மாநில அரசுகள், மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அளித்துள்ளன.



மருந்தக ஆய்வாளர் விசாரணை

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் முதுநிலை மருந்தக ஆய்வாளர் நித்தின் குமார் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து, முழுமையான விசாரணை முடிந்த பின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்படும் என்று அவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments