காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமனம்
காஞ்சிபுரம், அக்.14:
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ரூ.29 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் டிசம்பர் 8 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோயில் திருப்பணிகளை பழமை மாறாமல் புதுப்பித்தல்,பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை கண்காணித்து ஆய்வு செய்திடவும் ,பணி முன்னேற்ற விபரங்களை சீராய்வு செய்யவும் சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோயில்களுக்கான நகை சரிபார்ப்புக் குழுவின் இணை ஆணையராக இருந்து வரும் ரா.வான்மதி ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிக்கான சிறப்பு அலுவலராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதர் ஆணை பிறப்பித்துள்ளார்.
கோயில் திருப்பணிகளை செய்து வரும் பணியாளர்கள்,ஒப்பந்ததாரர்கள் சிறப்பு அலுவலருக்கு போதுமான ஒத்துழைப்பு தருமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்

No comments
Thank you for your comments