மோட்டார் வாகன ஆய்வாளர் லோகநாதனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை..
வங்கி லாக்கர் சாவி மற்றும் 84,000 ரொக்கப் பணம் , ஆவணங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டதது..
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டு பகுதியான குமரன் நகர் பகுதியில் வசிப்பவர் லோகநாதன். இவர் திருவள்ளூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூபாய் 1.24 லட்சம் மதிப்பிலான பணம் கைப்பற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று அவரது காஞ்சிபுரம் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில் , ஆய்வாளர் கீதா தலமையிலான குழுவினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 84 ஆயிரம் , தனியார் வங்கி லாக்கர் சாவி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டிலிருந்த 65 சவரன் நகை ஆய்வு செய்யப்பட்டு அதன் பின் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை குறித்தும் இவர் மீது வழக்கு பதியப்படும் என தெரிய வருகிறது.

No comments
Thank you for your comments