Breaking News

சாலை ஆய்வாளர்கள் தங்களது பணிகளை செய்வதில் சமரசம் கூடாது - ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளர் ப.பொன்னையா பேச்சு


புத்தாக்கப்பயிற்சில் கலந்து கொண்ட சாலை ஆய்வாளர்கள்(உள்பட) காணொலிக்காட்சி மூலமாக முகாமை தொடக்கி வைத்து பேசுகிறார் ஆணையாளர் ப.பொன்னையா

காஞ்சிபுரம், அக்.13:

சாலை ஆய்வாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை செய்யும் போது எக்காரணத்தை முன்னிட்டும் அதில் தயக்கமோ அல்லது தாமதமோ செய்யாமல் தரமானதாக பணியை செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளர் ப.பொன்னையா திங்கள்கிழமை பேசினார்.

Jivada Kumkumadi Tailam

🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறையின் மாநில பயிற்சி மையத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 818 சாலை ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியின் முதற்கட்ட 3 நாட்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளர் ப.பொன்னையா முகாமை தொடக்கி வைத்து பேசியது.


சாலை ஆய்வாளரகள் ஊரக வளர்ச்சித்துறையின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் பணிகளுக்கான மதிப்பீடு தயாரிப்பது,தொழில் நுட்ப அனுமதி வழங்குவது, ஒப்பந்தப்பணிகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாலை ஆய்வாளர்கள் எந்தப் பணியையும் நேரில் போய் பார்த்து அளவிடும் கருவிகளால் அளந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கண்ணால் பார்த்து அளவிடுவதை தவிர்த்து விட வேண்டும்.சிமிண்ட் சாலைகள் அமைக்கும் போது கான்கிரீட் கலவை முறையாக செய்யப்படுகிறதா என்பதையும்,அப்பணியில் தயக்கமோ, தாமதமோ அல்லது சமரசமோ காட்டவே கூடாது.


ஒரு சில சாலை ஆய்வாளர்கள் பணியில் நல்ல பெயர் வாங்குவார்கள்.ஆனால் அவர்களது பணிப்பதிவேடு முறையாக பராமரிக்கமாட்டார்கள்.

அதை முறையாக பராமரிக்கா விட்டால் பதவி உயர்வு வருவதில் தாமதம் ஏற்பட்டு விடும். சாலை ஆய்வாளர்கள் பணி என்பது மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் ஒரு பணி என்றும் பேசினார்.விழாவிற்கு ஊரக வளர்ச்சித்துறையின் தலைமைப் பொறியாளர் ஏ.ஜி.சேதுராமன், கண்காணிப்பு பொறியாளர் குத்தாலிங்கம், செயற்பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பயிற்சி மைய இயக்குநர் ப.மந்திராசலம் வரவேற்றார். விழாவில் இணை இயக்குநர் வீராச்சாமி உட்பட தமிழகம் முழுவதுமிருந்து சாலை ஆய்வாளர்கள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 📰 தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

Jivada Kumkumadi Tailam

🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 


No comments

Thank you for your comments