டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா..!
கோவை காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா கோவை மருத்துவ மையம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்லா பழனிசாமி தலைமையில் கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிச்சாமி, கோவை மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் என்.ஜி.பி. கலையரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சூ சரவணன் பட்டமளிப்பு உறுதி மொழியை வழங்கினார்
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ ஆர் எஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றி இளங்கலை பட்டம் 1,479, முதுகலை பட்டம் 431 மற்றும் பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பெற்ற 82 மாணவர்களும் பட்டம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் அறக்கட்ட ளையின் முதன்மை செயல் அதிகாரி புவனேஸ்வரன், முதன்மை செயல் இயக்குனர் நடேசன், முனைவர் இரா.முத்துசாமி மற்றும் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments
Thank you for your comments