பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் - மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார் Cash prizes and certificates were presented to the winners of the speech competition by District Collector Kalaichelvi Mohan.
காஞ்சிபுரம், அக்.13:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 445 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்பேத்கர் மற்றும் முன்னால் முதலமைச்சர் மு.கருணாநிதி இருவரது பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
இப்போட்டியில் வெற்ற பெற்றவர்களில் முதலிடத்தை பிடித்தவருக்கு ரூ.5 ஆயிரம்,2 வது இடத்துக்கு 3 ஆயிரமும்,3 வது இடத்துக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு பரிசாக ஒருவருக்கு ரூ.2 ஆயிரமும் சான்றிதழையும் ஆட்சியர் வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பாரதி மற்றும் அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
📰 தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments