நெசவாளர் கூட்டுறவுச் சங்க தேர்தலை நடத்தக் கோரிக்கை
காஞ்சிபுரம், அக்.12:
காஞ்சிபுரம் கே.எஸ்.பார்த்தசாரதி கைத்தறி சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் சங்க தலைவர் ஜெ.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
சங்க துணைச் செயலாளர்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் என்.பி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க செயலாளர் பா.ஸ்டாலின் வரவேற்றார். இக்கூட்டத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல நெசவாளர்களுக்கும் மழைக்காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும்,
நெசவாளர் கூட்டுறவுச் சங்க தேர்தலை நடத்த வேண்டும்,
60 வயதைக் கடந்த அனைத்து நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கடுமையாக உயர்ந்து வரும் ஜரிகை விலையை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.மூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி நிர்வாகி மலர்மன்னன், சங்க முன்னாள் தலைவர் பி.வீ.சீனிவாசன், சங்க துணை செயலாளர் ஜெ.ஜெயச்சந்திரன் ஆகியோர் உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் த.ரவி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments