Breaking News

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக் ரீடெய்லர் ரிலையன்ஸ் டிஜிட்டல் — இப்போது விருத்தாச்சலத்தில்!

 விருத்தாச்சலம் :

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ரீடெய்லர் ரிலையன்ஸ் டிஜிட்டல், விருத்தாச்சலத்தில் தனது புதிய கடையை திறந்துள்ளது. SETC (பெரியார்) பஸ் டிப்போக்கு எதிரில் அமைந்துள்ள இந்த புதிய ரிலையன்ஸ் டிஜிட்டல் கடை, 6200 சதுர அடிகள் பரப்பளவு கொண்டது.

புதிய கடையின் திறப்பை முன்னிட்டு, விசேஷ தொடக்க விழாச் சலுகைகள் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்ப பொருட்கள் காரணமாக வாடிக்கையாளர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.


இந்த கடையில், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களுக்கு பிந்தைய பராமரிப்பு சேவை, எக்ஸ்பெர்ட் டெக் ஸ்குவாட் மற்றும் ரெஸ்க்யூ சர்வீஸ் எக்ஸ்பெர்ட்கள் மூலமாக சிறந்த தொழில்நுட்ப உதவியைப் பெறலாம். மேலும், விரைவான டெலிவரி மற்றும் பொருத்துதல் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான டெக்னாலஜி தயாரிப்புகளை தாமதமின்றி அனுபவிக்கலாம்.

புதிய கடையில், முன்னதாக வருவோருக்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் முன்னணி வங்கி கார்டுகளில் 10% வரை கேஷ்பேக் பெறும் வாய்ப்பும் உள்ளது.

 

ரிலையன்ஸ் டிஜிட்டல், 500-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பிராண்ட்களின் 2000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள், ரெஃப்ரிஜெரேட்டர்கள், ஹோம் தியேட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள், லேப்டாப்கள், அக்சசரீஸ் மற்றும் பலவகை சிறிய எலக்ட்ரானிக் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ்கள் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வது” என்பதே ரிலையன்ஸ் டிஜிட்டலின் நோக்கம். வாடிக்கையாளர்களுக்காக ஈசி ஈஎம்ஐ உள்ளிட்ட பல்வேறு கடனுதவி வாய்ப்புகளுடன், ஒப்பற்ற சலுகைகளும் சிறந்த விலையில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை வழங்கி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பத்தை அனுபவிக்கச் செய்வதே நிறுவனத்தின் குறிக்கோள்.


✍️ செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545

No comments

Thank you for your comments