Breaking News

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ரஜினி மகள் சௌந்தர்யா தரிசனம்


காஞ்சிபுரம், ஆக.9:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா சுவாமி தரிசனம் செய்தார்.


முன்னதாக கோயில் ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றார்.

சுவாமி தரிசனத்துக்கு பிறகு ஆலயத்தை வலம் வந்த பின்னர் நுழைவுவாயில் இருந்த திருநங்கையர்களுக்கு பண உதவி செய்து விட்டு சென்றார்.

அவர் தனது தந்தை ரஜினி நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.



No comments

Thank you for your comments