காஞ்சிபுரத்தில் பொன்மொழிப்பலகை வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம், அக்.19:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது காஞ்சி அன்னச்சத்திரம் அறக்கட்டளை. பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் அந்த அறக்கட்டளை சார்பில் பள்ளிகளில் பொன்மொழிகள் எழுதி வைக்கும் பலகை வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் தியாகி நிதிநாடும் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து பொன்மொழிப் பலகையினை காஞ்சி அன்னச்சத்திரம் நிர்வாகி மோகன் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது பசுமை இந்தியா அறக்கட்டளையின் நிர்வாகி பசுமை மேகநாதனும் உடன் இருந்தார்.
தினசரி பொன்மொழிகள் பலகையில் எழுதி வைக்கப்படும் போது மாணவர்களின் சிந்தனையும், செயல்பாடுகளும் சிறப்பாக அமையும் என்பதற்காக அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொன்மொழி பலகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக காஞ்சி அன்னச்சத்திரம் நிர்வாகி மோகன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments