விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கான நிதியளிப்பு
விருத்தாசலம் :
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு, ரூ. 13,55,500 நிதியினை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் “இதுதான் பாஜக–ஆர்.எஸ்.எஸ் ஆட்சி, இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் உரையாற்றுகையில்,
“ஆரிய மனுதர்மத்தை நிலைநிறுத்த எந்த வழியும் எடுத்தாலும் அது வெற்றி பெறாது. ராமர் மரத்தின் பின்னால் இருந்து வாலியை தாக்கியது போல, பல மின்மினி பூச்சிகளையும் ஈசல்களையும் இணைத்து மக்களை ஏமாற்றும் முயற்சிகள் நடக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது முடியாது,”
என்று கூறினார். மேலும்,
“எல்லோரும் படிக்க வேண்டும், ஆண்–பெண் சமம் எனக் கூறும் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமா? அல்லது பெண்களும் சூத்திரர்களும் படிக்கக்கூடாது எனக் கூறும் மனுதர்ம சட்டமா? — இதனை தீர்மானிக்கும் தேர்தல் தான் 2026. அந்தத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற தி.க முழுமையாக பாடுபடும்,”
எனவும் தெரிவித்தார்.
அதேபோல், திருச்சி சிறுகனூரில் 92 அடி உயரத்தில் கட்டப்படும் தந்தை பெரியார் சிலையின் கீழ் “பெரியார் உலகம்” அமைக்கப்பட உள்ளது. அதில் உலக சமூக முன்னேற்றத்திற்கான நூலகங்கள், படிப்பகங்கள், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு ஆகியவை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments