பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், பழவேரி ஊராட்சியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக இன்று 10,000 பனைமர விதைகள் நடும் விழா நடைபெற்றது.
பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, பனைமர விதைகள் நட்டார்கள். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் இணைந்து பனைமர விதைகள் நட்டார்கள்.
இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் (பொ) திருமதி.அ.நளினி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ/ மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon



No comments
Thank you for your comments