“நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும், உயர் இரத்த அழுத்தம். நீரிழிவு நோய், மின் இதய வரைபடம். எக்கோ. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே முதலியவையும், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும். ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், மேலும் பதினைந்து துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தின் அரசு கீழ் பதிவு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் மட்டுமின்றி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 40 வயதிற்கு மேற்பட்டோர்.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள். பழங்குடியினர் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, முகாமில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் வயதானவர்களுக்கும், உயர் இரத்த அழுத்தம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இம்முகாம் மிகவும் பயனுள்ளதாகவும், அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் ஒரே இடத்தில் கிடைக்க செய்து, மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இத்திட்டத்தினை செயல்படுத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 11 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மருத்துவ காப்பீடு அட்டை 4 பயனாளிகளுக்கும், தாட்கோ சார்பில் 25 தூய்மைப் பணியாளர்களுக்கு, நலவாரிய அட்டைகளும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் பதிவுபெற்ற 3 தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளையும், 1 பயனாளிக்கு ஓய்வூதிய ஆணையினையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா செந்தில், மருத்துவ குழுவினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments