Breaking News

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு




காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட  செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (03.10.2025) நடைபெற்ற  “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன் படி, ”உங்களுடன் ஸ்டாலின்" என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் ஆக மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. 

இதில் முதற்கட்டமாக ஜூலை 15.07.2025 முதல் 14.08.2025 வரை  மொத்தம் 78 முகாம்கள் மற்றும் இரண்டாவது கட்டமாக 19.08.2025 முதல் 12.09.2025 வரை  மொத்தம் 74 முகாம்கள் நடைபெற்றன. 


தற்போது மூன்றாம் கட்டமாக செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 14 வரை 68 முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 

இம்முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தபடுகின்றன, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


அதன்படி, இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட  செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். 

பின்பு முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமினையும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். 

தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள்  முகாமில்  அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் குறைகளை உடனடியாக தீர்வு வைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார்கள்.  இந்நிகழ்வின் போது    அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments