Breaking News

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய 70வது வார்டு கவுன்சிலர்...!

கோவை பூ மார்க்கெட் வார்டு எண் 70 க்கு உட்பட்ட பகுதியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு 70 வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக வட்டக் கழக செயலாளர் சுரேஷ் நாராயணன் தலைமையில் திமுக வார்டு கவுன்சிலர் சர்மிளா சுரேஷ் நாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.முன்னதாக 70வது வார்டுக்குட்பட்ட அன்னா பூங்கா புனரமைப்பு பணிகள் முடிவுற்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பகுதிகழக நிர்வாகிகள் மற்றும் பாலாஜி விக்னேஷ், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455



No comments

Thank you for your comments