காஞ்சிபுரம் பழனியாண்டவர் கோயிலில் பால்க்குட ஊர்வலம்
காஞ்சிபுரம், ஆக.26:
காஞ்சிபுரம் நெமந்தக்காரத்தெருவில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 5 வது நாள் நிகழ்வையொட்டி பால்க்குட ஊர்வலம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் நெமந்தக்கார ஒத்தவாடைத் தெருவில் உள்ள அமரேஸ்வரர் கோயிலிலிருந்து 108 பெண்கள் பால்க்குடம் எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்து சேர்ந்ததும் அவரவர்களது கரங்களாலேயே தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
ஊர்வலத்தின் போது எஸ்.நரேஷ் என்ற பக்தர் 108 வேல்களை உடம்பில் பூட்டியவாறு வந்து தண்டாயுதபாணிக்கு தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் மூலவர், சண்முகர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவர் பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் அலங்காரமாகி வீதியுலா வருகையில் அசுதரன் தன் படைத்தளபதிகளுடன் திக்விஜயம் செய்தல் மற்றும் பானுகோபன் வதம் ஆகியனவும் நடைபெற்றது.
திங்கள்கிழமை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் அமைந்துள்ள அரசகாத்த அம்மனிடம் சக்தி வேல் பெறுதல்,தேரில் சண்முகர் வீதியுலா மற்றும் சூரசம்ஹாரம் ஆகியனவும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments