Breaking News

மாநில குண்டு எறிதல் போட்டியில் காஞ்சி மாணவருக்கு தங்கப்பதக்கம் Kanchi student wins gold medal in state shot put competition


காஞ்சிபுரம், அக்.5:

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர் சபரீஷ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


முதலமைச்சர் கோப்பைக்காகவும்,மாநில அளவிலான போட்டிகளாகவும் மதுரையில் இம்மாதம் 2 ஆம் தேதி குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 


இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர் சபரீஷ் குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

மாணவர் சபரீஷை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, பயிற்சியாளர் தாஸ் ஆகியோரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



No comments

Thank you for your comments