மத்திய பிரதேசம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் -அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை
மத்திய பிரதேசம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் -அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை
ஒருபுறம் அமலாக்கத்துறை சோதனை, மறுபுறம் மத்திய பிரதேச போலீசார் உரிமையாளர் ரங்கநாதனிடம் விசாரணை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருமல் மருந்து குடித்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, சுங்குவார்சத்திரம் ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட" கோல்ட்ரிஃப்" என்ற இரும்பல் மருந்து தான் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. மத்தியபிரதேச மாநிலத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த விவகாரம், இந்தியாவிலேயே உலுக்கி இருந்தது.
ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று இருப்பதாக, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை கண்டுபிடித்துள்ளது. தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை நடத்திய விசாரணையில், இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட டைஎதிலீன் கிளைக்கால் ( Diethylene glycol (DEG)) இருந்ததை தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்
கிட்டத்தட்ட இந்த மருந்தில் 48 சதவித்திற்க்கு மேல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த வேதிப்பொருள் கலந்ததால் இது, மருந்தே கிடையாது இது விஷம் எனவும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் பெயிண்ட் தயாரிக்கவும், பிரேக் ஆயில் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கராஜனை மத்திய பிரதேச போலீசார், சென்னை அசோக் நகரில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ரங்கராஜன் மத்திய பிரதேச போலீசாரால், விசாரணைக்காக நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று ரங்கராஜனை, மத்தியபிரதேச போலீசார் சுங்குவார்சத்திரம் அழைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை முதலே இந்த நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையினர் காலையிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரங்கராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் சோதனை செய்ய வந்திருந்த அதிகாரிகள், நிறுவனம் பூட்டப்பட்டிருந்தால் வெளியிலே நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஊழியர்கள் வந்த பிறகு சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக ரங்கநாதனை மத்தியபிரதேச போலீசார், சுங்குவார்சத்திரம் மருந்து ஆலைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரங்கநாதனிடம் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், அருகில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் வைத்து ரகசியமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
📰 தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments