Breaking News

நிலத்தை கிரையம் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.30 கோடி மோசடி – தம்பதி உள்பட 4 பேருக்கு எதிராக புகார்



 விருத்தாசலம், அக். 8:

🔸 ரூ.14 கோடி மோசடி குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மங்களூர் வாணியர் தெருவை சேர்ந்த கலைச்செல்வி (36) என்ற பெண், நிலம் வாங்கும் பெயரில் தன்னை ஏமாற்றியதாகக் கூறி, தம்பதி உள்பட நால்வருக்கு எதிராக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

🔸 “நிலம் தருவோம்” என நம்ப வைத்து ரூ.1.30 கோடி வசூல்

அந்த மனுவில் கலைச்செல்வி தெரிவித்ததாவது:

“என் ஊரை சேர்ந்த ஒரு தம்பதி, அவர்களின் மகன் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோர், நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.1 கோடியே 30 லட்சம் தர வேண்டும் என கேட்டனர்.
அதன்படி நானும் 3 தவணைகளில் அந்த தொகையை கொடுத்தேன். ஆனால் அவர்கள் சார் பதிவாளர் அலுவலகம் வரை அழைத்து சென்று பத்திரப்பதிவு செய்யாமல் ஏமாற்றி விட்டனர்.”

🔸 குடும்பத்தின் வாழ்நிலை சிதைந்தது

“என் கணவர் வெளிநாட்டில் சம்பாதித்த பணம், நகைகள் விற்றதும், வீட்டை அடமானம் வைத்தும் அந்த பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் நிலம் தராமல் மோசடி செய்தனர்.
நான் கொடுத்த பணத்தை வைத்து அவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும், ஏலச்சீட்டும் நடத்தி வருகின்றனர்,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

🔸 கடுமையான கோரிக்கை

“அந்த நால்வருக்கும் எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும். மேலும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்,” என கலைச்செல்வி கோரியுள்ளார்.


 

🔸 அரசியல் நிர்வாகிகள் ஆதரவு

இப்புகார் மனுவை அளித்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மங்களூர் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் காசி புயல் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு, கலைச்செல்விக்கு ஆதரவு தெரிவித்தனர்.

✍️ செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545

No comments

Thank you for your comments