இடிந்து விழும் நிலையில் காவணிப்பாக்கம் பயணிகள் நிழல்கூடம்
காஞ்சிபுரம், அக்.28:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அருகே உள்ளது காவணிப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆர்.அரவிந்தன் என்பவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..
காவணிப்பாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழல் கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
தரைதளமும் சேதமடைந்துள்ளது.எங்கள் கிராமத்திலிருந்து பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவர்கள், வெளியூர்களுக்கு செல்லும் கிராம பொதுமக்கள் உட்பட பலரும் இந்த பயணிகள் நிழல்கூடத்தில் பேருந்து வரும் வரை காத்திருந்து அதன் பின்னரே பேருந்துகளில் செல்கின்றனர்.
பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் இக்கட்டிடம் மேலும் இடிந்து விழுந்து விடாமல் செப்பனிட்டு தர வேண்டும் அல்லது புதியதாக பயணிகள் கூடம் கட்டித்தர வேண்டும்.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆட்சியர் அவர்கள் காவணிப்பாக்கம் கிராமத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments