Breaking News

காஞ்சியில் கத்தி முனையில் 4.50 கோடி கொள்ளை - 5 பேர் கைது - 123 பவுன் நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் பணம் பறிமுதல்


காஞ்சிபுரம் :

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே போர்வலி பகுதியை சேர்ந்தவர் ஜாடின் (56) இவர் தன் சகோதரருடன் சேர்ந்து 2017 ஆம் ஆண்டில் இருந்து கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார் இதன் வாயிலாக கமிஷன் அடிப்படையில் நாடு முழுவதும் பணம் மற்றும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டாய் கிருஷ்ணா காரில் உள்ள லாக்கரில் நான்கரை கோடி ரூபாய் பணத்தை வைத்து தங்கள் நிறுவனத்தின் ஓட்டுனர்கள் பியூஸ் குமார் தேவேந்திரபடேல் என்கிற இருவர் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை சவுகார்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த நிலையில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக அக்காரானது காஞ்சிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது மூன்று கார்களில் வந்த கேரளத்தை சேர்ந்த 17 பேர் கொண்ட கும்பல் பல்வேறு பகுதிகளில் வழிமறிக்க முயன்று காஞ்சிபுரம் அருகே ஆட்டுப்புத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் பணம் எடுத்து வந்த பியூஸ் குமார், தேவேந்திர படேல் வந்த காரை மடக்கி கத்தி முனையில் காரை கடத்தி ஆற்காடு அருகே சென்றபோது பணத்தை கொள்ளையடித்துவிட்டு அந்த காரை அங்கேயே விட்டுச் சென்றனர். 

ஓட்டுநர்கள் பியூஸ் குமார் தேவேந்திர பாடல் ஆகியோரையும் அங்கேயே இறக்கிவிட்டு தப்பிருக்கிறார்கள். 

இச்சம்பவம் குறைத்து மும்பையில் உள்ள தங்கள் நிறுவன உரிமையாளர் ஜாடினிடம் இருவரும் தகவலை தெரிவித்திருந்த நிலையிலே ஜாதி காஞ்சிபுரம் வந்து பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையிலே காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் கொள்ளை கும்பல் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.



இந்நிலையில் கேரளா மாநிலம் சென்ற தனிப்படை போலீசார் பாலக்காடு,கொல்லம், திருச்சூர் மாவட்டங்களை சேர்ந்த சந்தோஷ் சுஜிலால் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். 

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் மேலும் 12 பேர் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து கைது செய்த ஐந்து பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் அவர்களை உடனடி காவல் விசாரணைக்கு எடுத்து காவல் ஆய்வாளர்கள் அலெக்சாண்டர், சிவகுமார் தலைமையிலான போலீசார் மீண்டும் கேரளா சென்று மீதமுள்ள கொள்ளையர்களையும், பணத்தினை பறிமுதல் செய்யும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments