கார் ஓட்டுநர்கள் இருவரை கடத்தி ரூ.4.50 கோடி கொள்ளை - கேரளாவை சேர்ந்த 5 பேர் கைது - 123 பவுன் நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் பணம் பறிமுதல்
காஞ்சிபுரம், அக்.29:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே போரிவேலி பகுதியில் கொரியர் நிறுவனம் நடத்தி வருபவர் ஜாடின்(56) இவர் பணம்,நகை,விலை உயர்ந்த பொருட்கள் ஆகியனவற்றை கமிஷன் பெற்றுக்கொண்டு நாடு முழுவதும் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கொரியர் நிறுவனம் மூலமாக காரில் ரூ.4.5 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு நிறுவனத்தில் ஓட்டுநர்களாக பணிபுரியும் பியூஸ்குமார் மற்றும் தேவேந்திர பாட்டில் இருவரையும் சென்னையில் சவுகார்பேட்டைக்கு அனுப்பியுள்ளார். இருவரும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே ஆட்டுப்புத்தூர் கிராமப்பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் திடீரென 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இவர்களது காரை வழிமறித்து கடத்தி வேலூர் அருகே ஆற்காடு வந்ததும் ஓட்டுநர்கள் இருவரையும் இறக்கி விட்டு காரில் பணத்துடன் தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் ஓட்டுநர்கள் இருவரும் உரிமையாளரான ஜாடினுக்கு கொடுத்த தகவலின் பேரில் அவர் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை காவல் நிலையத்துக்கு வந்து புகார் செய்தார்.எஸ்பி கே.சண்முகம் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
குற்றவாளிகள் பயன்படுத்திய கார்களின் எண்கள், கைப்பேசிகள், 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், கொரியர் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தனிப்படையினர் கேரள மாநிலத்தில் கொல்லம், திருச்சூர்,பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு சென்று சந்தோஷ்(42), ஜெயன்(46), சுஜிபால்(24), ரிஷாத்(27), குஞ்சு முகம்மது(31) ஆகிய 5 பேரை கைது செய்து காஞ்சிபுரம் வந்தனர். இச்சம்பவத்தில் மேலும் சில குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் 5 பேரையும் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தி மீண்டும் கேரளாவுக்கு காவல்துறையினர்அழைத்து சென்றுள்ளனர்.
பொன்னேரிக்கரை காவல் ஆய்வாளர் அலெக்சாண்டர் தலைமையில் தனிப்படையினர் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.
No comments
Thank you for your comments