Breaking News

அக். 11ம் தேதி அன்று பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் - அறிவிப்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுமக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றும் நோக்கில், வரும் 11.10.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு பல்வேறு வட்டங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன என்று  மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார்.

முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

  • காஞ்சிபுரம் வட்டம் – தாமல்
  • உத்திரமேரூர் வட்டம் – பினாயூர்
  • வாலாஜாபாத் வட்டம் – சங்கராபுரம்
  • திருப்பெரும்புதூர் வட்டம் – சிறுமாங்காடு
  • குன்றத்தூர் வட்டம் – மாடம்பாக்கம்

மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய/நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு அல்லது மாற்றம் போன்ற கோரிக்கைகளை இம்முகாம்களில் நேரடியாக அளிக்கலாம்.


கும்பம் ராசி பலன்கள்

அத்துடன், மூன்றாம் பாலினத்தினர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமூகத்தினருக்கும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments