Breaking News

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை – 3 இளைஞர்கள் கைது 🚔



காஞ்சிபுரம், அக்.8:

காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்களை விஷ்ணுகாஞ்சி காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் வேளாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (26), ராஜா (38) மற்றும் லாலாகுட்டை தெருவைச் சேர்ந்த ஜாஹீர்ஹூசேன் (24) ஆகியோர் விற்பனை நோக்கத்திற்காக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விஷ்ணுகாஞ்சி காவல்துறையினர் அவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து ₹21,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



No comments

Thank you for your comments