Breaking News

மகளிர் திட்டம் செயல்படுத்தும் வாழ்வாதார மேம்பாடுகள் – காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு


 காஞ்சிபுரம், அக்.8:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்தில், மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ராவத்தநல்லூர் ஊராட்சியில் உள்ள ஒரு உற்பத்தியாளர் குழுவிற்கு, ₹2 லட்சம் வீதம் மொத்தம் 10 குழுக்களுக்கு ₹20 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரச்செக்கு எண்ணெய் தயாரித்தல், பாரம்பரிய நெல் உற்பத்தி, அப்பளம் தயாரித்தல், சிறுதானிய உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தினையாம்பூண்டி ஊராட்சியில் ஆடு வளர்ப்பு திட்டத்தையும், மேனலூர் ஊராட்சியில் மாடு வளர்ப்பு திட்டத்தையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிச்சாண்டி மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் உடன் இணைந்து பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments