🔥 வாய்த்தகராறு உயிரை மாய்த்தது— நண்பனை குத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் சினிமாவில் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு தேடி சென்னை ஐயப்பன் தாங்கல், சீனிவாசபுரம், அசோக நந்தவனம் எனும் தனியார் குடியிருப்பில் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனியார் குடியிருப்பு பகுதியில் மது அருந்திவிட்டு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
புத்தாண்டுகொண்டாட்டத்தின்போது நண்பர்களான மணிகண்டன் மற்றும் ரூத்ரன் ஆகிய இருவருக்கும் மது போதையில் வாய் தகராறு ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் மாறி மாறி பேசிக்கொண்டனர்.
தகாத வார்த்தையால் பேசியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் சமையலறையில் இருந்த கத்தியை கொண்டு வந்து ருத்ரன் மார்பில் இதயப் பகுதியில் பலமாக குற்றியுள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே ருத்ரன் பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இச்சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய மணிகண்டனை (வயது 30) கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஆனது காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடி, மாங்காடு காவல் நிலைய போலீசார் உதவி உடன் சாட்சி ஆதாரங்களோடு கொலை குற்றத்தை நிரூபித்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகனகுமாரி,நண்பனை குத்திக் கொலை செய்த குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் இரண்டு மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
நீதிபதியின் தீர்ப்பினை தொடர்ந்து மாங்காடு போலீசார் குற்றவாளி மணிகண்டனை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நண்பனை தகாத வார்த்தையால் பேசிய நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த வலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்த சம்பவம் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments
Thank you for your comments