காஞ்சிபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
காஞ்சிபுரம், அக்.14:
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் ஏகேடி தெருவைச் சேர்ந்த சக்திவேல், சரண்யா தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது 2 வது பெண் குழந்தை கார்த்திகா(3)கடந்த 3 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சால் அவதிப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
தொடர்ந்து காய்ச்சல் அதிகமானதால் மருத்துவர்கள் சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை உயர் அதிகாரியிடம் கேட்ட போது காய்ச்சல் வருவதற்கு பல காரணங்கள் இருக்கும்.
உயிரிழந்த சிறுமிக்கு டெங்கு பரிசோதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்பட்டதில் அவருக்கு அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.வேறு ஏதேனும் பாதிப்புகள் இருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments
Thank you for your comments