Breaking News

📰 காஞ்சிபுரம் திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

 


 

மாநகரச் செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

 
காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்டம் மாநகரத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாநகரச் செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் மாவட்ட செயலாளர் சுந்தர் உத்தரவின் பேரில் வரவிருக்கும் தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர் திலகர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மற்றும் தொகுதி பொறுப்பாளர் ஜே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் தயாரிப்புகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர துணைச் செயலாளர் முத்துசெல்வம், நிர்மலா, பகுதி துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், குடியரசு தமிழ் தலைவர் குமரேசன், தனலட்சுமி, வட்டச் செயலாளர்கள் வண்டி வரதன், கௌரிசங்கர், எழில் குமார், சாகுல் ஹமீது, செல்வம், ஜெய் கணேஷ், செந்தில் சண்முகம், பரதன், பூக்கடை சந்தானம், பார்த்திபன், ரவி, வேல்முருகன், மண்டி சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments