Breaking News

சுவிட்சர்லாந்து ஜங்ஃப்ராஜோச் மலையின் உச்சியில்“தமிழ் வாழ்க!” கோஷமிட்ட திமுக கொடி பறக்க வைத்த திமுக பிரமுகர்!



சுவிட்சர்லாந்தில் யூரோப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த பனிமலைகளில் ஒன்றான ஜங்ஃப்ராஜோச் மலையின் 3,500 மீட்டர் உயர உச்சியில், திமுக கொடியை ஏற்றி “தமிழ் வாழ்க!” எனக் கோஷமிட்ட திமுக பிரமுகரின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் மல்லிகா மற்றும் அவரின் கணவர், திமுக மாநில வர்த்தக அணி செயலாளர் ராமகிருஷ்ணன், குடும்பத்துடன் ஒரு வாரம் பயணமாக சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர்.

அப்போது, யூரோப் பகுதியில் உள்ள ஜங்ஃப்ராஜோச் மலையின் உச்சியில் திமுக கட்சி கொடியை ஏற்றி, “தமிழ் வாழ்க!” என முழக்கமிட்ட ராமகிருஷ்ணன், வெளிநாட்டு மண்ணில் தமிழரின் பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


மொழி தெரியாத வெளிநாட்டு நாட்டில் கூட “தமிழ் வாழ்க” என ஒலித்த அந்தக் குரல், வெளிநாட்டிலும் தமிழர் பெருமையை உணர்த்திய ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

No comments

Thank you for your comments