Breaking News

தகுதியற்ற நபர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் பொது தேர்தல் அரசு செயலாளர் அறிவுரையின்படியும், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 01.01.2026-ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி  இன்று (29.10.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும்  உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  நடந்தது.

இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசியல் கட்சி பிரநிதிகளிடம் முழுமையாக விளக்கினார். இதன்படி, 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒரு மாதம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இப்பணியினை மேற்கொள்ள 1401 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அவர்களை கண்காணிக்க 145 மேற்பார்வையாளர்களும் (BLO Supervisors) நியமிக்கப்பட்டுள்ளனர். 

04.12.2025 -க்குள் வாக்குச்சாவடி மறு வரையறை வகைப்படுத்த வேண்டும்.  05.12.2025 முதல் 08.12.2025 வரை கட்டுப்பாட்டு பட்டியலினை புதுப்பித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய வேண்டும். 09.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட வேண்டும். 09.12.2025 முதல் 08.01.2026 வரை கோரிக்கைகளும் மறுப்புரைகளும் பெற வேண்டும். 

09.12.2025 முதல் 30.01.2026 வரை வீடு வீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணை பிறப்பித்தல், கோரிக்கைகள், மறுப்புரையாக பெறப்பட்டவைகளை முடிவு செய்தல் வேண்டும்.  மேற்படி பணிகளை கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் எட்டு உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் (AEROs) அவர்களை  மேற்பார்வையிட துணை ஆட்சியர் நிலையில் நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்களும் (EROs) உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் விவரம் மாநில தலைமை தேர்தல் அலுவலர் இணையதளமான https://www.elections.tn.gov.in மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இணையதளமான https;//kancheepuram.nic.in -ல் பதிவேற்றம் செய்யப்படும். இந்த பணிகளை மேற்கொள்ளும் போது வாக்காளர் பதிவு அலுவலர்கள் எந்தவொரு தகுதியான வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடுபடக்கூடாது. 


தகுதியற்ற நபர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது. வீடுகளுக்கு 04.11.2025 முதல் 04.12.2025 வரை கணக்கெடுக்க செல்லும் போது வீடு பூட்டப்பட்டு இருந்தால் கணக்கீட்டு படிவத்தினை கணக்கெடுக்க செல்வோர் அந்த வீட்டில் வைத்துவிட்டு வருவார். வாக்காளர் சுய சான்று அளித்து 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் போதுமானது.  

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA)  சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறைகளை விளக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்காளர் பதிவு அலுவலரால் பயிற்சி வழங்கப்படும். 

வீடு வீடாக கணக்கெடுப்புக்கு முன், வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி, சிறப்பு தீவிர திருத்தத்தின் அட்டவணை செயல்முறை மற்றும் அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் குறித்து அவர்களுக்கு விளக்குவார் என்றும், மேற்படி சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் போது ஒத்துழைப்பு தருமாறும்  கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் 01.01.2002- ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 25.04.2002 / 15.09.2005 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரம்

தொகுதி

ஆண்

பெண்

மொத்தம்

28, ஆலந்தூர்

220926

215961

436887

29, திருப்பெரும்புதூர்

124370

132159

256529

36, உத்திரமேரூர்

94084

102678

196762

37, காஞ்சிபுரம்

112824

119654

232478

மொத்தம்

552204

570452

1122656

 


காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 27.10.2025 வரை  வாக்காளர்களின் விவரம் வருமாறு

தொகுதி

ஆண்

பெண்

மூன்றாம் பாலினம்

மொத்தம்

கடைசி சிறப்பு திருத்தத்தில் சேர்ந்தவர்கள்

28, ஆலந்தூர்

196601

202667

62

399330

10800

29, திருப்பெரும்புதூர்

198682

211281

71

410034

14979

36, உத்திரமேரூர்

131803

142672

64

274539

5553

37, காஞ்சிபுரம்

152910

164345

40

317295

5471

மொத்தம்

679996

720965

237

1401198

36803

 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா. முருகேசன், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலிஇ.ஆ.ப.,  திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சி.பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.பு.விஜயகுமார், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments