Breaking News

கொள்ளையடித்தவழக்கில் 5 பேர் கைது -வேலூர் மத்திய சிறையில் அடைப்பு - 123 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்


 

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிகரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ₹4.5 கோடி கொள்ளை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணையில், மொத்தம் 17 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் 25.10.2025 அன்று வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து வாங்கிய 123 பவுன் தங்க நகைகள் மற்றும் ₹13 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இவ்வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள 12 பேரை கைது செய்ய காவல் துறை தீவிரமாக தேடிவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்ட, பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் கடந்த 22.08.2025-ம் தேதி அன்று திரு.ஜெத்தீன்(56), த/பெ.திலீப்குமார், எண்.1303, ஸ்ரீராஷ்ராஜ் டவர், ரொக்காடியோ கிராஸ் லேன், SVP சாலை, கோகுல் ஓட்டல் அருகில், போரிவலி மேற்கு, மும்பை என்பவர் அளித்த புகாரில், தான் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு P.உமேஷ்சந்திரா & சன்ஸ் LLP என்ற அங்காடியா கொரியர் சேவை நிறுவனத்தை 2017-ம் ஆண்டு முதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

இந்நிறுவனத்தில் கொரியர் மூலம் பணம் மற்றும் நகைகளை கமிசன் அடிப்படையில் இந்தியா முழுவதும் அனுப்பி வருவதாகவும் இந்நிலையில் கடந்த 20.08.25-ம் தேதி மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான பணம் ரூ.4,50,00,000/-த்தை மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான MH-04-LM-3179 என்ற பதிவெண் கொண்ட Hyundai CRETA காரில் லாக்கரில் வைத்து மேற்படி நிறுவனத்தின் ஊழியர்கள் 1.பியூஸ்குமார் மற்றும் 2. தேவேந்திர படேல் ஆகிய இரண்டு டிரைவர்களும் மேற்கண்ட பணத்துடன் பெங்களூர் To சென்னை செளகார்பேட்டைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது காலை 08.45 மணியளவில் ஆட்டுபுத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் மேற்படி நிறுவன காரை பதிவெண் தெரியாத Innova Car, Swift, Wolkswagon Polo கார்கள் நிறுத்தி மேற்கண்ட நிறுவனத்துக்கு சொந்தமான பணத்துடன் கூடிய MH- 04 - LM- 3179 என்ற CRETA காரை எடுத்து சென்றதாக புகார் அளித்ததன் அடிப்படையில், B7 பொன்னேரிக்கரை காவல் நிலையம் குற்ற எண்.Cr.No.217/2025 u/s 310(2) BNS-ல் 22.08.2025-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.


இவ்வழக்கு சம்மந்தமாக பொன்னேரிகரை மற்றும் சிவகாஞ்சி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இரண்டு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ICJS & NATGRID App-யை பயன்படுத்தி கடந்த 24.10.2025-ம் தேதி அன்று பொன்னேரிகரை காவல் ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழு, Hyundai Accent (KL 35 9409) மற்றும் FIAT (KL 02 AR 7682) ஆகிய கார்களில் வந்த குற்றவாளிகள் 

1) சந்தோஷ்(39), த/பெ.சந்திரன், பொட்டுப்பாறை வீடு, ஒடுவன்காடு, நெச்சுப்புள்ளி போஸ்ட், முண்டூர், பாலக்காடு, கேரள மாநிலம், 

2)ஜெயன் @ கோடலி ஜெயன்(45), த/பெ.தங்கப்பன், முண்டக்கல் வீடு, பாடி போஸ்ட், முண்டக்கல் வீடு, கேரள மாநிலம், கொடலிபுரம் டி மூணுகுரி மாவட்டம், கொடலிபுரம் டி. மாநிலம், 

3) சுஜிலால்(36), த/பெ.சுரேந்திரன், எண்.416, ஆதிச்சநல்லூர் கிராமம் & அஞ்சல், கொல்லம் தாலுகா & மாவட்டம், கேரள மாநிலம், 

4) ரிஷாத்(27), த/பெ.அப்துல் ரஷீத், துண்ட்வால் ஹவுஸ், விருச்சிகலா கிராமம், அரிச்சநல்லூர் மாவட்டம், கேரளா மாநிலம், 

5) குஞ்சி முகமது(31), த/பெ.அபுபக்கர், பீடிகா வல்லபு வீடு, நாகலாச்சேரி கிராமம், பெரிங்கோடு அஞ்சல், ஒட்டப்பாலம் தாலுக்கா, பாலக்காடு மாவட்டம், கேரளா ஆகியோர்களை கைது செய்தனா்.


மேற்படி குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியதில், மேற்கூறிய குற்றத்தில் 17 பேர் ஈடுபட்டதாக தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட 5 பேரும் 25.10.2025 அன்று வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். 

மேலும் இவ்வழக்கில், கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து வாங்கிய 123 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கில் தொடர்புடைய 12 குற்றவாளிகளைப் பிடிக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments