புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரின் தாயார் மறைவு- முதலமைச்சர் ரங்கசாமி அஞ்சலி
காஞ்சிபுரம், அக்.30:
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள பெருநகர் கிராமம்.இக்கிராமத்தில் வசித்து வந்த அமைச்சர் லட்சுமி நாராயணனின் தாயார் கிருஷ்ணவேணி (86) வயது முதிர்வின் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவரது உடல் பெருநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.தகவலறிந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணவேணியின் இறுதி ஊர்வலத்திலும் ரங்கசாமி கலந்து கொண்டார்.
புதுச்சேரி முதலமைச்சருடன் அம்மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் உடன் வந்திருந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments
Thank you for your comments